ATM-கள் இரவு 9 மணிக்கு மேல் செயல்படாதா ?

வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி “இனி இரவு 9 மணிக்கு மேல் ATM கள் மூடப்படும், இயங்கவே இயங்காது” என வைரலாய் சுற்றிவருகிறது. இது உண்மையா ? உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ATM இயந்திரங்களில் பணம் நிரப்பும் வாகனங்களில் உள்ள பணம் மற்றும் பொருத்துபவர்களின் பாதுகாப்பிற்காக ATM இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணி இனி நகரங்களில் இரவு 9 மணி வரையும், கிராமங்களில் மாலை 6 மணி வரையும், பாதுகாப்பற்ற பகுதிகளில் மாலை 4 மணி வரைக்குளாக மட்டுமே செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த செய்தியே தவறுதலாக புரியப்பட்டு வதந்தியாய் பரவியிருக்கிறது.

Follow me on whatsapp @ https://chat.whatsapp.com/Az3y0mLCWS62O5cS4zHFc2

ATM கார்டுகள் செல்லாது !

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் பழைய கருப்பு பட்டை மட்டும் தாங்கிய ATM அட்டைகளை எந்தவித கட்டணமும் இல்லாமல் புதிய EMV சிப் பொருத்திய அட்டைகளை வங்கியில் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பழைய அட்டைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளமையால் இந்த அட்டைகளின் செயல்பாட்டை இந்த ஆண்டோடு நிறுத்திக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

உங்களது SBI ATM அட்டை பழையாதாக இருந்தால் உடனடியாக அதிக பாதுகாப்பு வசதி கொண்ட EMV சிப் கார்டை விண்ணப்பித்து பெற்றுக் கொண்டு தடையில்லா வங்கி சேவையை அனுபவியுங்கள்.

Follow me on what’s app @ https://chat.whatsapp.com/Az3y0mLCWS62O5cS4zHFc2

தமிழகத்தில் வசிப்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஆண்ட்ராய்டு ஆப்ஸ் !

தமிழக மக்களுக்கான பயனுள்ள ஆண்ட்ராய்டு ஆப்ஸ் !

1. TNEPDS

தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வமான செயலியான இதன் மூலம் நமது ஸ்மார்ட் அட்டையுடன் இணைக்கப்பட்ட
மொபைல் எண் கொண்டு உயிர்ப்பித்து ஸ்மார்ட் கார்ட் தகவல்கள், ரேசனில் வாங்கிய பொருட்களின் விவரம் & நியாய விலைக்கடைகள் செயல்பாடு போன்றவை தெரிந்துகொள்ள இயலும்.

<<<<< Click here to download >>>>>

2. TANGEDCO Mobile App (OFFICIAL)

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ செயலியான இதன் மூலம் மின்கட்டண விவரம் அறிதல், ஆன்லைனில் கட்டணம் செலுத்துதல், மின்சார பயன்பாடு போன்ற தகவல்களை பெற இயலும்.

<<<<< Click here to download >>>>>

3. Tez

கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேக செயலி இந்திய அரசின் தேசிய பிணப்பரிமாற்ற ஆணையத்தின் புதிய UPI முறைமை அடிப்படையில் இயங்குகிறது. இதன் மூலம் நமது வங்கி கணக்கை மொபைல் எண் கொண்டு இணைத்து எளிமையாக வங்கி பணப்பரிமாற்றம் செய்ய இயலும்.

<<<<< Click here to download >>>>>

4. Google Indic keyboard

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் சிறந்த கிபோர்டு இது. இந்திய பிராந்திய மொழிகளுக்கென்றே கூகுள் வெளியிட்டுள்ள தனித்துவம் மிக்க செயலி ஆகும். ஆங்கிலத்தில் INDRU என தட்டினால் எளிதாக இன்று என தமிழில் கிடைக்கும்.

<<<<< Click here to download >>>>>

5. Agaraadhi

சிறந்த தமிழ் சொல் அகராதி. தமிழ் சொல்லை உள்ளீடு செய்து ஆங்கில விளக்கமும், ஆங்கில சொல்லை உள்ளீடு செய்து தமிழ் விளக்கத்தையும் பெற இயலும். கவிஞர் வைரமுத்துவின் மகன் கவிஞர் கார்க்கியின் ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

<<<<< Click here to download >>>>>

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு

மத்திய பாட வாரியம் ஆண்டிற்கு இரு முறை நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பாட திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் 1 – 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற இந்த தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். 1-5 வகுப்பு ஆசிரியராக முதல் தாளினையும், 6-8 வகுப்பு ஆசிரியராக இரண்டாம் தாளினையும் எழுத வேண்டும்.

சுருக்கம் :

தேர்வின் பெயர் : ஆசிரியர் தகுதித்தேர்வு.

கல்வித்தகுதி : முதல் தாளுக்கு +2 ற்கு பின் ஆசிரியர் பட்டயம். இரண்டாம் தாளுக்கு +2 , பட்டப்படிப்பு & பி.எட்.

தேர்வு கட்டணம் : பொது பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ₹700, இரண்டு தாளுக்கும் சேர்த்து ₹1200. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தாளுக்கு ₹300 & இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ₹600.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் மட்டுமே.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27/08/2018.

தேர்வு குறித்த முழு விவரங்களையும் http://www.ctet.nic.in இணையத்தில் நன்கு படித்தரிந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம்

சித்தம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா & இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள இந்திய முறை மருத்துவம் கற்பிக்கும் அரசு கல்லூரிகளில் விண்ணப்பத்தை பெற்றோ அல்லது www.tnhealth.org எனும் இணையத்தில் பதிவிறக்கியோ செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரைப் பறிக்கும் MOMO சேலஞ்ச் !

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்களை குறிவைத்து பல உயிர் பலியை வாங்கிய Blue whale game ஐ அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாத நிலையில் இதுகுறித்த பேச்சு அடங்கியிருந்தது. ஓழ்ந்த பீதி தற்போது அசூர வேகத்தில் MoMo வாக உருவெடுத்திருக்கிறது.

அதென்ன MoMo செலஞ்ச் ?

Facebook ல் வலம் வந்த இந்த ஆட்டம் தற்போது Whatsapp ஐ தொற்றிக்கொண்டுள்ளது. முகநூலில் இருந்து எடுக்கப்படும் தொடர்பு எண்ணில் சாட்டிங் ஆரம்பமாகும். முதலில் எளிய டாஸ்க் தரப்படும் அதன் தொடர்ச்சியாய் அந்தரங்க டாஸ்க்குகள் உருவெடுக்கும். அவ்வப்போது மனநல பாதிப்பு உண்டாக்குகிற வகையில் சைக்கோ படங்கள் வருமாம். கடைசியில் டாஸ்க் கடுமையாகும் நிலையில் செய்ய தவறினால் தற்கொலைக்கு தூண்டப்படுமாம். தவறினால் பகிர்ந்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் கசியும் என கடுமையான மிரட்டல் விடுக்கப்பட்டு உயிரை பறித்துவிடுமாம்.

வாழ்க்கைக்கு மொபைலோ தவிர, மொபைலுக்காக வாழ்க்கை இல்லை என்பதை புரிந்துகொண்டு மொபைலில் இருந்து விலகி இருங்கள். குறிப்பாக குழந்தைகளை விலக்கி வையுங்கள்.

டெபிட் கார்டை பாதுகாக்க எளிய 5 வழிகள் !

பேருந்தில் செல்லும்போது பிக்பாக்கெட் அடிப்பது, வங்கியில் இருந்து வெளியேறும் போது பணப்பையை பிடுங்கிக் கொண்டு ஓடுவது போன்ற திருட்டுக்கள் எல்லாம் உருமாறி ஹைடெக் திருட்டுகள் ஆகிவிட்டது. திருடர்கள் எல்லாம் நூதன முறையில் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டனர். இதில் முக்கியமான ஒன்று ஏடிஎம் தகவல்களை திருடி அதன் மூலமாக கொள்ளையடிப்பது. இது போன்ற நூதன கொள்ளையர்களிடம் இருந்து நம்முடைய பண அட்டையை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

1. பண அட்டை சார்ந்த தகவல்களை எக்காரணம் கொண்டும் சமூக வலைத் தளத்தில் பகிரவோ அல்லது புகைப்படம் எடுத்தோ அனுப்ப வேண்டாம்.

2. வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறிக்கொண்டு பண அட்டை சார்ந்த தகவல்களை யாரேனும் கேட்டால் அளிக்கக் கூடாது. உண்மையில் வங்கியில் இருந்து எந்த ஒரு அழைப்பும் நமக்கு வராது.

3. ஹோட்டல், சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்குகள் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி காணப்படுவதால் அது போன்ற இடங்களில் பண அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது கையை வைத்து மூடிக்கொண்டு ரகசிய எண்ணை உள்ளீடு செய்யவும்.

4. பண அட்டையின் ரகசிய எண் கசிவு குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவ்வப்போது ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றிக்கொள்வது நல்லது. குறிப்பாக அவ்வாறு மாற்றப்படும் ரகசிய எண்ணை மறவாது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை எனில் எளிதில் மறக்காத எண்ணை ரகசிய குறியீடாக வைத்துக் கொள்ளுங்கள்.

5. பயன்படுத்தும் பண அட்டையின் வங்கி உதவி எண்ணை தவறாது மொபைலில் குறித்து வைத்திருக்கவும். அவசர காலங்களில் அவ்வெண்கள் நமக்கு உதவியாய் இருக்கும்.

பணத்தை சம்பாதிப்பது பெரிதல்ல, சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என மட்டும் பதிவிடவும்.

Android P க்கு என்ன பெயர் சூட்டியது கூகுள் ?

புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் வெளியாகும் போதெல்லாம் மொபைல் பயன்பாட்டாளர்கள் மத்தியில் புதிய இயங்கு தளத்தின் பெயர் குறித்த ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. இவ்வாண்டு வெளியாகும் ஆண்ட்ராய்டு Pக்கு என்ன பெயர் கூகுள் சூட்டியுள்ளது என பார்ப்போம்.

Android P க்கு Pie எனும் பெயரை சூட்டியுள்ளது கூகுள். ஆகஸ்ட் மாத துவக்கத்தில் தனது pixel போன்களுக்கு update அளிக்கவும் தயாராகிவிட்டது கூகுள். வெளியாகவிருக்கும் இந்த ஆண்ட்ராய்டு pie மொபைல் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என கூகுள் தெரிவித்திருக்கிறது.

ஆதாரை சுற்றும் வதந்தி

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் UIDAI எனும் பெயரில் 1800 300 1947 என்ற எண் உள்ளதா? உடனடியாக அதை அழித்துவிடுங்கள். இதன் மூலம் உங்களது ஆதார் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுவிடும் என்ற சேதி சமூக வலைத்தளங்களை வைரலாக சுற்றிவருகிறது. உண்மை என்ன ?

ஆதார் அட்டை குறித்த உதவி எண் 1947 என்பதை கூகுள் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தவறுதலாக வேறொரு எண்ணை பதிவு செய்திருக்கிறது. இது குறித்த பிரச்சனை உருவெடுக்கவே கூகுள் தானாக முன்வந்து மன்னிப்பு கோரியது. இவ்வளவு தான் செய்தி. தற்போது வலைதளங்களில் வெளியாகி இருக்கும் ஹேக் தகவல்கள் உண்மையில்லை.., எல்லாம் வதந்தி. இது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை என ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

கதவிருந்து பயனில்லை !

இந்தியர்களின் பயணத்தில் நீக்கமற கலந்துவிட்ட ரயில் பயணங்கள் தற்போதெல்லாம் பாதுகாப்பாற்றதாய் மாறிவிட்டது. இதற்கு நீ.. நான்.. நாம் என யாரையும் கை காட்ட இயலாது.

ரயில்கள் அனைத்திலும் கதவுகள் இருக்கிறது. அவற்றை நாம் ஒருகணமும் பயன்படுத்துவதில்லை. நெடுந்தூர பயணங்களில் சில நேரங்களில் மட்டும் நம்மை காத்திடும் கதவுகள். நகரங்களில் சீறிப்பாயும் சிறுத்தைகளில் ஏனோ மூட தயங்கி நிற்கிறது.

மெட்ரோ போன்ற ரயில்களில் தானியங்கி கதவுகள் பாதுகாக்கும். இதற்காக பெரும் பணம் செலவழித்து சாமனியனால் மெட்ரோவில் செல்ல இயலுமா? மாநகர பேருந்துகள் கூட தானியங்கி கதவுகளால் பயணிகளை பொத்தி பாதுகாக்கும் போது, ரயில்வேவால் முடியாதா?

ரயில்வேவால் முடியாவிட்டால் என்ன நமக்காவது பாதுகாப்பாய் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றக்கூடாதா!